Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Aug 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#39084

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்போக்குவரத்து

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. அதில் வந்தவாசி, தென்னாங்கூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். காலை, மாலை வேளையில் கல்லூரிக்கு சென்று வர போதிய அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஓரிரு பஸ்களே இயக்கப்படுவதால் கல்லூரி மாணவர்கள் அந்தப் பஸ்களில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும். -வீரப்பன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#39083

ஆவணங்கள் இல்லாமல் வலம் வரும் வாகனங்கள்

போக்குவரத்து

செங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மோட்டார்சைக்கிள்களின் புகைப்போக்கியில் இருந்து அதிக சத்தம் வரும் வகையில் மாற்றி அமைத்து ஓட்டி வருகின்றனர். அந்தச் சத்தம் மக்களுக்கு இடையூறாக உள்ளது. அதிக சத்தம் எழுப்பக்கூடிய, ஓட்டுனர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வலம் வரும் மோட்டார்சைக்கிள்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி, செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 5:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#38872

சாலை சேதம்

சாலை

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பி.எம்.எஸ்.கொல்லை 4-வது தெருவில் சாலை சேதமடைந்துள்ளது. பக்கத்து தெரு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எங்கள் தெரு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் எங்கள் தெரு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா? -செ.ரவிச்சந்திரன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#38871

பஸ் பயணிகள் நிழற்கூடம் சேதம்

பஸ் பயணிகள் நிழற்கூடம் சேதம்மின்சாரம்

ஜோலார்பேட்டைைய அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் பஸ் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்துள்ளது. அதில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பயணிகள் பஸ் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும். -எம்.கே.லோகஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#38870

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை கிழக்குமேடு பகுதியில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளிைய நோக்கி செல்லும் சாலை சேதமடைந்து குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும். -சந்தோஷ்ஹரி, நாயுடுவட்டம், புதுப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#38869

சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

திருப்பத்தூர் சின்னக்கடை தெருவில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் அமைந்துள்ளன. இந்தக் கடைகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக லாரிகள் எந்த நேரமும் வந்து செல்கின்றன. இதனால் அந்தத் தெருவில் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சின்னக்கடை தெருவில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதியளிக்க வேண்டும். -தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#38868

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் பெரிய கம்மவார் தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். -கோகுல், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#38867

மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

மின்சாரம்

நெமிலியை அடுத்த சித்தூர் கிராமத்தின் வழியே செல்லும் சாலையில் மின் கம்பம் அகற்றப்படாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இரவில் விபத்துகள் ஏற்படுகிறது. மின் கம்பத்தை அகற்ற மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது, நெடுஞ்சாலைத்துறையினர் மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்தன், சித்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#38866

ரெயில்வே நடைமேடை ஓரம் கழிவுநீர்

ரெயில்வே நடைமேடை ஓரம் கழிவுநீர்மற்றவை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழியில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நடைமேடை பகுதியில் கழிவுநீர் கலக்காதவாறு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#38865

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட சங்கர் நகர் தெரு முனையில் பொதுமக்கள் குப்பைகளை போட குப்பைத்தொட்டி வைத்தனர். ஆனால், தற்போது அந்தக் குப்பைத்தொட்டி இல்லாததால் இப்போது குப்பையை தெரு முனையிலேயே போட்டு விட்டு செல்கின்றனர். அங்கு குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். -வேல்முருகன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:58 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#38860

சாலையின் நடுவே பள்ளம்

சாலை

வாலாஜா காளிகாம்பாள் கோவில் தெருவில் கோர்ட்டு உள்ளது. இந்தத் தெருவின் நான்கு முனை சந்திப்பு பகுதியில் ஒரு பள்ளம் உள்ளது. இது, சாலையின் நடுவே பல மாதங்களாக இருப்பது தெரியாமல் இரவிலும், மழைக்காலத்திலும் அந்த வழியாக வருவோர் பள்ளத்தில் விழும் அவலம் நடந்து வருகிறது. வாலாஜா நகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடி சாலையை சமன் செய்ய வேண்டும். -வீராசாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#38859

சாலை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும்

சாலை

வாலாஜா கோனேரி தெரு, அணைக்கட்டு ரோடு பகுதிகளில் இருபுறமும் சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் முழுமையாக அகற்றப்படவில்லை. தற்போது சாலைகளின் இருபுறமும் பலவித ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன. சாலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். கடைகள் முன்பு பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு வாகனங்கள், தள்ளுவண்டிகளை நிறுத்தி வைத்துள்ளனர். சாலைகளில் மக்கள் நடமாடும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். -ஸ்ரீதர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick