Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 July 2025 5:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57881

நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

போக்குவரத்து

கண்ணமங்கலம் அருகே அழகுசேனை ஊராட்சி சூளைமேடு பகுதி திருவண்ணாமலை-வேலூர் மெயின் ரோட்டில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வேலூர் செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர். அந்த வழியாக வேலூர் செல்லும் பஸ்கள் நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால், மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சூளைமேடு பகுதியில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். -கமலகண்ணன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:07 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57875

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் கால்வாய்கள் பெரும்பாலும் தூர்வாரப்படாமல், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் பகுதியாக மாறி வருகிறது. அதில் ஆரணி-தேவிகாபுரம் நெடுஞ்சாலை, தச்சூர் சாலை, தலைமை தபால் நிலையம் முன்பாக உள்ள கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:59 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#57872

சுற்றுச்சுவர் இடிந்த மாணவர் விடுதி

சுற்றுச்சுவர் இடிந்த மாணவர் விடுதிமற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு அரசினர் மாணவர் விடுதி உள்ளது. அந்த விடுதியில் மாணவர்கள் பலர் தங்கி படிக்கின்றனர். அந்த விடுதியின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி இடிந்துள்ளது. அந்த வழியாக இரவில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது. இடிந்த சுற்றுச்சுவரை சீரமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, தச்சம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57739

கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?கழிவுநீர்

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை அருகில் ஓல்டு டவுன் செல்லும் உத்திரிய மாதா கோவில் தெரு உள்ளது. இந்தச் சாலை, ஓல்டு டவுன், எம்.ஜி.ஆர். நகர், சார்பனா மேடு, தென்ன மரத்தெரு போன்ற இடங்களை இணைக்கும் முக்கிய வழியாக உள்ளது. இங்குள்ள கால்வாய் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது தூய்மை பணியாளர்கள், கால்வாயில் தூர்வாரும் கழிவுகளை அகற்றாமல், சாலை ஓரத்திலேயே கொட்டி வைத்து விடுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை...

மேலும்
ஆதரவு: 24
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 8:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57738

மீன்மார்க்கெட் மேற்கூரை சேதம்

மீன்மார்க்கெட் மேற்கூரை சேதம்மற்றவை

வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் தினமும் ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக வருகின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேற்கூரை ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ேசதம் அடைந்த மீன் மார்க்கெட் மேற்கூரையை புதிதாக அமைத்துதர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்ரசீது, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 8:05 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#57737

நீர் நிலை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்

மற்றவை

அணைக்கட்டு தாலுகா அகரம் ஊராட்சி மராட்டிப்பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நாரப்பக்குட்டை உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அறிவுரையின் பேரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள் குட்டையை தோண்டும் பணியை மேற்கொண்டனர். ஆனால், அந்தப் பணியை ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து விட்டனர். நாரப்பக்குட்டையை மீட்டுத்தர அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லட்சுமணன், மராட்டிப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 8:03 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#57736

சாலையின் நடுவே பள்ளங்கள்

சாலையின் நடுவே பள்ளங்கள்சாலை

கே.வி.குப்பம் தாலுகா சென்னாங்குப்பத்தை அடுத்த மேல்புதூர் மற்றும் ஏ.என்.புதூர் கிராம தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளத்தால் வாகன விபத்துகள் நடக்கின்றன. பள்ளத்தை சரி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பொதுமக்கள் மண் எடுத்து வந்து பள்ளத்தில் கொட்டி நிரப்பி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சீர் செய்ய வேண்டும். -சந்தோஷ்குமார், சென்னாங்குப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57734

கால்வாயில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

கால்வாயில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்குப்பை

வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அருகே சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:57 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#57733

பஸ்சின் வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும்

போக்குவரத்து

குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பஸ்சில் ஏராளமான மக்கள், மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். அந்த பஸ்ைச பேரணாம்பட்டு ஒன்றியம் பொகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்ஆலாங்குப்பம் கிராமம் வரை நீட்டிக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கிருஷ்ணமூர்த்தி, பொகளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:53 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57732

சாலையோர ஆக்கிரமிப்புகள்

சாலை

வாலாஜா நகரில் உள்ள 2 தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த 2 சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். சாலையோரம் தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -காசிநாதன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:52 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#57731

புதிய பஸ் நிலையத்தை திறப்பது எப்போது?

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாகக் கடைகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. இதனால் பஸ் நிலையத்தில் தகர சீட்டுகள் அடிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதால் பஸ் நிலையம் குறுகி காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? -மணிவாசகம், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:49 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57730

திறக்கப்படாத நகர்ப்புற சுகாதார நிலையம்

மற்றவை

வாலாஜாவில் உள்ள சோளிங்கர் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. கட்டி 6 மாதம் ஆகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கவில்லை. சுகாதார நிலையத்துக்குச் சுற்றுச்சுவர் கட்டாததால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. அந்தக் கட்டிடத்தின் முன், பின் பக்க தரைதளம் மேடு, பள்ளமாக உள்ளது. அதை சீர் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலு, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick