Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Oct 2023 4:58 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#41106

தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி

தண்ணீர்

அரக்கோணம்-சோளிங்கர் ரோடு சிக்னல் கம்பம் அருகே ஒரு வங்கி முன்பு சாலையோரம் பள்ளம் இருப்பதால், அதில் மழைநீர் தேங்குகிறது. சாலையோரம் செல்லும் பொதுமக்கள் அந்த வழியாக வரும் வாகனங்களுக்காக ஒதுங்கும்போது, மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழும் அவலம் நடக்கிறது. பள்ளத்தில் முரம்பு மண் கொட்டி சரி செய்ய நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபாகரன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#41104

ரவுண்டானா அமைப்பார்களா?

சாலை

ராணிப்பேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரில் ஏரி, கிருஷ்ணகிரி சாலை, தெற்கு ரெயில் நிலைய சாலை சந்திக்கும் சாலை 3 மாதங்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஏற்கனவே ரவுண்டானா இருந்தது. அதேபோல் தற்போது ஒரு புதிய ரவுண்டானா அமைத்தால் விபத்து ஏற்படாது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரவுண்டானா அமைப்பார்களா? -த.நித்தியானந்தம், காரை, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#41102

பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் புதுப்பிக்கும் வேலை நடந்து வருகிறது. தற்போது பாதி பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. எனினும் மழை, வெளியிலுக்கு ஒதுங்க தற்காலிகமாக இடமில்லாததால் பச்சிளம் குழந்தைகளோடு பயணிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். -கீர்த்திவாசன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#41101

சாலையை சரி செய்ய வேண்டும்

சாலை

வாலாஜா டோல்கேட் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் செல்லும் சாலை பகுதி மேடும் பள்ளமுமாக உள்ளது. இரவிலும் மழை பெய்யும் நேரங்களிலும் அந்த வழியாக வருவோர் சிரமப்படுகின்றனர். விபத்துகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#41100

மேம்பாலம் கீழே பழுதான சாலை

சாலை

வாலாஜா-அணைக்கட்டு சாலையில் மேம்பாலத்தின் கீழே குடிமல்லூர், தேவதானம், சாத்தம்பாக்கம், ராணிப்பேட்டையை நோக்கி செல்லும் நுழைவுப் பகுதியில் மழைப் பெய்தால் தண்ணீர் தேங்குகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீர் தேங்காமல் இருக்க சாலை சீர் செய்யப்படுமா? -ரத்தினகுமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41099

பயன்படுத்த முடியாத அடிபம்பு

பயன்படுத்த முடியாத அடிபம்புமற்றவை

திருப்பத்தூர் சி.கே.சி. நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையோரம் அடிபம்பு ஒன்று உள்ளது. இந்த அடிபம்பை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அங்கு, சாலை பணி மேற்கொள்ளும்போது அடிபம்பை சுற்றி உயரமாக சாலை அமைத்து விட்டனர். இதனால், பொதுமக்கள் குடங்கள் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத அவல நிலையை ஏற்படுத்தி விட்டனர். எனவே அங்கு தண்ணீர் பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தூர்வாரப்படாமல் உள்ளது. அதை தூர்வாரவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:44 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41098

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்சாலை

திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையம் அருகே காதர் மொய்தீன் தெருவுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையோரம் ஆழ்துைள கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அந்த இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இந்தச் சாலையில் செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும், ஆழ்துளை கிணறு அடிபம்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், திருப்பத்தூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41097

பட்டுப்போன மரங்கள்

மற்றவை

திருப்பத்தூர் அரசு ஆரம்ப நகர்ப்புற சுகாதார நிலையத்தின் அருகே பட்டுப்போன மரங்கள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு செல்லும் சாலையில் ஏராளமான பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர். எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு பட்டுப்போன மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், திருப்பத்தூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41096

தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் அப்பாய் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு செல்லும் சாலையின் ஓரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. சாலையோரம் தடுப்புச்சுவர் இல்லாததால் ஒரு சில நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கழிவுநீர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே இங்கு தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுப்பிரமணியம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:38 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#41095

குளம்போல் தேங்கும் மழைநீர்

குளம்போல் தேங்கும் மழைநீர்தண்ணீர்

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் விநாயகர் கோவில் தெருவில் மழைப்பெய்யும் நேரமெல்லாம் குளம்போல் மழைநீர் தேங்குகிறது. அந்த வழியாக வரும் கிராம மக்கள் தேங்கிய நீரில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா? -ஜாகீர், அப்துல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:36 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#41094

மின்கம்பத்தில் மரக்கிளை

மின்கம்பத்தில் மரக்கிளைமின்சாரம்

வேட்டவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு வெளி குடியிருப்பு பகுதியில் மின்கம்பத்தில் மரக்கிளைகள் மற்றும் முள்செடிகள் சுற்றி உள்ளது. மழைக்காலம் என்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் உடனடியாக முள்செடிகளை அகற்ற முன்வர வேண்டும். -தினகரன், வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:35 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#41093

சுகாதார வளாகம் திறந்திருக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்பக்கம் உள்ள கிரிவலப் பாதையில் விசேஷ நாட்கள் மட்டுமின்றி தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். கிரிவலப் பாதையில் பல்வேறு பகுதிகளில் சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுகாதார வளாகங்கள் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படுகிறது. இந்தச் சுகாதார வளாகங்களை அனைத்து நாட்களிலும் திறந்து கிரிவலம் செல்லும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். -அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick