Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Oct 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#41323

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்மின்சாரம்

திமிரிைய அடுத்த பழையனூர்-அத்தித்தாங்கல் செல்லும் சாலையின் குறுக்கே ஆபத்தான நிலையில் கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. நெல் அறுவடை எந்திரம், வைக்கோல் போர், கரும்பு பாரம் ஏற்றிய டிராக்டர்கள் சென்றால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட வேண்டும். -மாணிக்கம், திமிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#41321

ரவுண்டானா அமைக்க வேண்டும்

சாலை

ஆரணி வழியாக கனரக வாகனங்களான பஸ், லாரி போன்றவை மேல்மருவத்தூர், மேல்மலையனூர், சேத்துப்பட்டு, விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு செல்கின்றன. அந்த வாகனங்கள் ஆரணியின் பிரதான சாலையான காந்தி ரோட்டிலேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க வேலூரில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை வழியாக செல்ல சேத்துப்பட்டு சாலையை இணைக்கும் சாலை ரவுண்டானாவுடன் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நந்தகுமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#41318

தேங்கும் மழைநீரால் நோயாளிகள் அவதி

தேங்கும் மழைநீரால் நோயாளிகள் அவதிசாலை

ஆரணி கார்த்திகேயன் சாலையில் நகராட்சி சார்பில் இயங்கி வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக குளம் போல் மழைநீர் தேங்குகிறது. மருத்துவமனைக்கு நோயாளிகள் தேங்கிய மழைநீரில் நடந்துவர வேண்டிய அவல நிலை உள்ளது. மழைநீர் தேங்காமல் வடிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகவேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 4:50 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#41317

சாலை வசதி செய்து தர வேண்டும்

சாலை வசதி செய்து தர வேண்டும்சாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தேன்மலைப்பட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வயல் வெளிகளில் வீடு கட்டி வசிக்கின்றனர். இவர்கள் இங்கிருந்து பிரதான சாலைக்கு செல்லவோ, வயல்களுக்கு உர மூட்டைகள், வயலில் விளைந்த விளை பொருட்களை கொண்டு செல்ல போதிய சாலைவசதி இல்லை. சாலை வசதி கோரி அய்யம்பாளையம் கிராம சபா கூட்டத்தில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணாளன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#41315

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்கழிவுநீர்

வந்தவாசி நகராட்சி 12-வது வார்டில் கால்வாய் உடைந்து, கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் கால்வாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். -வே.குருலிங்கம், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 3:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41301

அகழியில் பிளாஸ்டிக் கழிவுகள்

அகழியில் பிளாஸ்டிக் கழிவுகள்மற்றவை

வேலூர் கோட்டை அகழியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் ஒருசில மீன்கள் செத்து மிதப்பதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. கோட்டையைச் சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோட்டை அகழியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும், செத்து மிதக்கும் மீன்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 3:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41299

மாடுகளால் இடையூறு

மாடுகளால் இடையூறுமற்றவை

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் மேம்பாலத்துக்கு கீழே புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிதுரை, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41117

இருள் சூழ்ந்த மீன் மார்க்கெட் சாலை

இருள் சூழ்ந்த மீன் மார்க்கெட் சாலைசாலை

வேலூர் புதிய மீன் மார்க்கெட் சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் அங்கு பஸ் ஏறுவதற்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இதனால் அவர்கள் அச்சமடைகின்றனர். அதுபோக வாகன ஓட்டிகளும் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் விளக்கை எரிய விட நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41115

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

வேலூரை அடுத்த கீழ்மொணவூர் அருகே பெருமாள் நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடின்றி புதர் மண்டி சேதம் அடைந்துள்ளது. சுகாதார வளாகத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரவிக்குமார், கீழ்மொணவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41113

பழுதான குடிநீர் தொட்டி

பழுதான குடிநீர் தொட்டிதண்ணீர்

வேலூர் அருகே கீழ்மொணவூரில் பெருமாள் நகர் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி பழுதாகி உள்ளது. தற்காலிகமாக சிறுமின்விசை குடிநீர் தொட்டி அமைத்து அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்து வருகின்றனர். மேல்நிலை குடிநீர் தொட்டியை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். -ஞானவேல், கீழ்மொணவூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41110

தேங்கி நிற்கும் மழைநீர்

தேங்கி நிற்கும் மழைநீர்தண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் அருகே திரு.வி.க. நகர் உள்ளது. இங்கு 21-வது தெருவில் பணிகள் முடிவடையாமல் மேடு பள்ளங்கள் உள்ளது. தற்போது தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகும் நிலை உள்ளதால், தண்ணீரை வடிய வைக்கவும், சாலை பணிகளை நிறைவேற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயச்சந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41108

பாதாள சாக்கடை மூடிகள் சேதம்

பாதாள சாக்கடை மூடிகள் சேதம்கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் அருகே நேதாஜி நகரில் இருந்து கணபதி நகர் செல்லும் வழியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பாதாள சாக்கடை மூடிகள் அருகருகே 2 இடங்களில் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. விபரீதங்கள் நடக்கும் முன், பாதாள சாக்கடை மூடிகளை பாதுகாப்பாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -இளவரசன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick