Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Oct 2023 4:33 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#41092

சேதமான தானியக்களம்

சேதமான தானியக்களம்மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி கிராமம். இங்கு ஏரிக்கரை அருகே தானியங்களை காய வைக்க உலர்களம் உள்ளது. இந்தக் களத்தை சரியான முறையில் பராமரிக்காததால் சுற்றிலும் சுவர்கள் உடைந்து மழைப் பெய்தால் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உலர் களத்தை முறையாக பராமரிக்க வேண்டும். -சிவா, கல்லேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 4:30 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#41091

குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்

குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்மற்றவை

ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பாறைகுளம் 100 அடி ஆழம் கொண்டதாகும். இந்தக் குளத்தில் அடிக்கடி மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களும், நடந்து செல்பவர்களும் தவறி விழுந்து பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு குளத்தைச் சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க மாவட்ட நிர்வாகமோ, ஊராட்சி ஒன்றிய நிர்வாகமோ, ஊராட்சி மன்றமோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாறன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:52 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40940

சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டும்

சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டும்சாலை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் மெயின் ரோட்டில் சிறிது தூரம் மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளது. அரசமரத்தெரு செல்லும் அருகே உள்ள சாலை ஆங்காங்கே பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பாதி தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை பணிகளை முழுமை பெற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40939

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

வேலூர் சத்துவாச்சாரி சக்தி நகரில், டபுள் ரோடு முதல் அன்புநகரை இணைக்கும் சாலை அமைக்க, பள்ளம் தோண்டி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சாலை அமைக்காததால், சாலையை மக்கள் பயன் படுத்த முடியாத நிலை உள்ளது. பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குமரேசன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40936

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

வேலூர் மாநகராட்சி 31-வது வார்டு சேண்பாக்கம் சந்தான ஈஸ்வரியம்மன் கோவில் தெருவில் சாலை மோசமாக உள்ளது. அதை, மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மழைப் பெய்யும் நேரத்தில் குட்டை குட்டையாக மழைநீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் பள்ளத்தில் சிக்குகின்றன. மாநகராட்சி நிர்வாகம் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#40934

பயன்பாட்டுக்கு வராத புதிய குடிநீர் தொட்டி

பயன்பாட்டுக்கு வராத புதிய குடிநீர் தொட்டிதண்ணீர்

கலவையை அடுத்த வெள்ளம்பி கிராமத்தில் மேல்நிலை நீர்த்ேதக்கத் தொட்டி பழுதடைந்துள்ளது. அதன் அருகில் புதிதாக மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. புதிய தொட்டியில் குடிநீர் நிரப்பாமல், பழைய தொட்டியிலேயே குடிநீர் நிரப்பப்படுகிறது. பழைய தொட்டியில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் வழியாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. எனவே புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பழுதடைந்த பழைய குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும். -புகழ், திமிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:36 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#40933

நாய்களுக்கு கருத்தடை

மற்றவை

வாலாஜாவில் உள்ள பல வார்டுகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சண்டை போட்டுக் கொள்கின்றன. அந்த நேரத்தில் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சந்திரசேகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#40932

அடிப்படை வசதிகள் தேவை

மின்சாரம்

சோளிங்கரை அடுத்த தாளிக்கால் கிராமத்தில் கனக துர்க்கையம்மன் கோவில் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய மின் கம்பங்கள் நடப்பட்டன. ஆனால் மின்கம்பங்களில் உயரழுத்த மின் கம்பிகள் பொருத்தப்படவில்லை. அவர்களின் வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுதவிர அவர்களுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட அடிப்படை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:31 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#40931

கழிவுநீர் கால்வாயை தூர்வாருவார்களா?

கழிவுநீர் கால்வாயை தூர்வாருவார்களா?கழிவுநீர்

அரக்கோணம் ஹவுசிங் போர்டில் புதிதாக அமைக்கப்பட்ட நகராட்சி பூங்கா முன்பு சுற்றுச் சுவரையொட்டி உள்ள கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது. மேலும் அந்த இடத்தின் அருகே குப்பைகளும் கொட்டப்படுகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி அலுவலர்கள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ் கார்த்திக், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40928

குழாய் உடைப்பு

குழாய் உடைப்புதண்ணீர்

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் அண்ணாநகர் உள்ளது. இந்தப் பகுதியில் சாலையின் நடுவே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக போடப்பட்ட குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. அதில் வாகனங்கள் சிக்கி விபத்துகள் நடக்காமல் இருக்க போலீசார் சார்பில் சாலையில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தானம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40926

பள்ளம் சரி செய்யப்படுமா?

சாலை

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தின் முன்பு அரசு பூங்கா. நிதியுதவி உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலையில் மிக பெரிய பள்ளம் உள்ளது. அதில் வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மயில்சாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40924

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?மற்றவை

திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து திருப்பத்தூர் நகராட்சி பூங்கா செல்லும் சாலையோரம் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. இந்தச் சாலையின் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். பட்டுப்போன மரம் சாலையில் செல்வோர் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தும் முன் மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick