4 Oct 2023 4:58 PM GMT
#41106
தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி
அரக்கோணம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அரக்கோணம்-சோளிங்கர் ரோடு சிக்னல் கம்பம் அருகே ஒரு வங்கி முன்பு சாலையோரம் பள்ளம் இருப்பதால், அதில் மழைநீர் தேங்குகிறது. சாலையோரம் செல்லும் பொதுமக்கள் அந்த வழியாக வரும் வாகனங்களுக்காக ஒதுங்கும்போது, மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழும் அவலம் நடக்கிறது. பள்ளத்தில் முரம்பு மண் கொட்டி சரி செய்ய நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபாகரன், அரக்கோணம்.