Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Nov 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42244

சுவரோடு ஒட்டிய அடிபம்பு

சுவரோடு ஒட்டிய அடிபம்புதண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி சவுத் அவென்யூ சாலையில் சமரச மையத்தை அடுத்த ஆழ்துளை குழாய் அருகில் சுவர் கட்டப்பட்டு உள்ளது. அந்தச் சுவரை ஒட்டிய நிலையில் ஆழ்துளை குழாய் அடிபம்பு பயனற்ற நிலையில் உள்ளது. அந்த அடிபம்பை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 4:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42243

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகரில் சவுத் அவென்யூ சாலைக்கு செல்லும் தெருவில் வங்கி எதிரில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சாலையின் அடியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சற்குணம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#42242

கால்வாய் தூர்வாரப்படுமா?

கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

குடியாத்தத்தை அடுத்த பரதராமி தபால் அலுவலக தெருவில் கால்வாயில் கழிவுநீர் சரியாக ஓடாமல் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜா, பரதராமி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 4:39 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#42237

கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணிகழிவுநீர்

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கழிவுநீர் கால்வாய் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், கழிவுநீரை வெளியேற வழி இல்லாமல் தேங்குகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் கட்டும் பணியை வரைந்து முடிக்க வேண்டும். தேங்கும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். -சுப்பிரமணியம், சோமசமுத்திரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 4:38 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#42235

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?தண்ணீர்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்யாண்டமோட்டூர் பகுதியில் பொன்னை திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் வினியோகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் சிறு மின்விசை தொட்டியை அமைத்து சில நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்த நிலையில் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கீழ்யாண்ட மோட்டூருக்கு நிரந்தரமாக குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 4:36 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#42233

கழிவுநீர் கால்வாய் சேதம்

கழிவுநீர் கால்வாய் சேதம்கழிவுநீர்

ராணிப்பேட்டை மாவட்டம் செங்கல்நத்தம் ராமாபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. இந்தக் கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சேதம் அடைந்த கால்வாயை சீர் செய்ய வேண்டும். -சிவராஜ், செங்கல்நத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 4:32 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#42232

மேம்பாலத்தை சுத்தம் செய்வார்களா?

மேம்பாலத்தை சுத்தம் செய்வார்களா?சாலை

அரக்கோணம்- காஞ்சீபுரம் சாலையில் உள்ள மேம்பாலத்தில் புல், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. மணல் துகள், குப்பைகள் கிடக்கிறது. மேம்பாலத்தை சுத்தம் செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜான்தாமஸ், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:53 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42084

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி கிராமத்தில் இருந்து மாம்பாக்கம் வரை செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் அவதிப்படுகின்றனர். மழைப் பெய்தால் சாலையில் மழைநீர் தேங்குகிறது. சாலையை சீரமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.காளிதாசன், சமூக ஆர்வலர், மட்றப்பள்ளி,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42082

பூங்காவை பராமரிப்பார்களா?

பூங்காவை பராமரிப்பார்களா?பூங்கா

ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கம் அருகில் சிறுவர் பூங்கா உள்ளது. அதில் உள்ள விளையாட்டு உபகரணங்களும், விலங்குகளின் சிலைகளும் சேதம் அடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைப்பார்களா? -ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:46 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42081

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்சாலை

ஜலகம்பாறை அருகே பெருமாபட்டு கிராமம் உள்ளது. இங்கு உள்ள சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை அதிக அளவு கொட்டி வைத்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைத்து குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். -சரண்ராஜ், பெருமாபட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#42080

தாழ்வான மின்கம்பிகளால் ஆபத்து

தாழ்வான மின்கம்பிகளால் ஆபத்துமின்சாரம்

நாட்டறம்பள்ளி அருகே கத்தரி பீடரில் உள்ள மின் கம்பத்தின் கம்பிகள் தாழ்வாக உள்ளன. இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின் கம்பிகளை மேலே உயர்த்தி கட்ட வேண்டும். -இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42079

குப்பைகளை எரிப்பது தடுக்கப்படுமா?

குப்பை

திருப்பத்தூர் அருகில் ஜலகம்பாறை செல்லும் சாலையில் சமுத்திரம் கிராமம் உள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிரம்பியதும் அதில் வைத்தே எரித்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் நச்சுக்காற்றை சுவாசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை எரிப்பதை தடுத்து முறையாக குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமநாதன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick