Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Nov 2023 5:37 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#42078

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையின் முன் அந்த வழியாக செல்லும் எந்த ஒரு பஸ்சும் நின்று செல்வதில்லை. காஞ்சீபுரம், திருத்தணி, சென்னை, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல காத்திருக்கும் நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுடன் வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர். வாலாஜா அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வி.சுந்தரமூர்த்தி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#42077

சாலையின் நடுவே மின்கம்பம்

மின்சாரம்

வாலாஜா-அணைக்கட்டு ரோட்டில் இருந்து கிருஷ்ணாபுரம் போகும் தார் சாலையில் மின்சார கம்பம் ஒன்று 15 ஆண்டுகளாக நடுரோட்டிலேயே உள்ளது. அந்த வழியாகத்தான் அம்மணந்தாங்கல், அமராவதி, குடிமல்லூர் போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். இந்த மின் கம்பத்தால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே மின் கம்பத்தை அங்கிருந்து அகற்றி சாலையோரம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஏழுமலை, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:30 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#42074

கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பார்களா?

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகளை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தை தகடுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளால் ஆற்காடு பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்களுக்கு இடையூறாக உள்ளது. கஇதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பார்களா? -ராஜகணபதி, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#42073

கைக்கெட்டும் உயரத்தில் மின்கம்பிகள்

கைக்கெட்டும் உயரத்தில் மின்கம்பிகள்மின்சாரம்

அரக்கோணம் ஒன்றியம் காவனூர் காலனியில் மின் கம்பத்தில் கம்பிகள் கைக்கெட்டும் உயரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை சற்று உயரத்தில் கட்ட வேண்டும். -கண்ணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#42071

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

ஆரணி-தச்சூர் சாலையில் தலைமை தபால் நிலையம் முன்னால் உள்ள பக்க கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் ஓடாமல் தேங்குகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார வேண்டும். -பிரவீன்குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#42070

சாய்ந்த மின்கம்பம்

சாய்ந்த மின்கம்பம்மின்சாரம்

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் இருந்து காட்டேரி செல்லும் சாலையில் இரும்பு மின் கம்பம் ஒன்று சாய்ந்த படி உள்ளது. மழைக்காலம் தொடங்கியதால் காற்று வீசும்போது, மண் பிடிமானம் இல்லாமல் கீழே சாய்ந்து ஆபத்து ஏற்படலாம். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -மணவாளன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#42069

நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

போக்குவரத்து

வேலூரில் இருந்து 225 வி அரசு பஸ் ஆரணி-தேசூர் வழியாக மகமாய்திருமணி வரை இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பஸ்சை சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தி விட்டனர். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சு.மண்ணு, மகமாய் திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#42067

பழமையான அரசு கட்டிடத்தால் ஆபத்து

பழமையான அரசு கட்டிடத்தால் ஆபத்துமற்றவை

வந்தவாசி காமராஜர் நகரில் தீயணைப்பு நிலையம் அருகில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட துணைத் தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் முற்றிலும் சிதிலமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அரசு கட்டிடத்தை இடித்து விட்டு அரசு நூலகம், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம் கட்டித்தர வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#42064

பயணிகள் நிழற்கூடம் தேவை

மற்றவை

வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் இந்திரா நகரில் பயணிகள் நிழற்கூடம் கட்டிக்கொடுத்தால் மழை, வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். தற்போது நிழற்கூடம் இல்லாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சிலர் சாலையோரம் அமர்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்திராநகரில் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தருவார்களா? -கா.பவானி, இந்திராநகர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#42060

டவுன் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ஜவ்வாதுமலை தாலுகா ஜமுனாமரத்தூரானது மலைவாழ் மக்கள் வசிக்கும் 36 கிராமங்களை கொண்ட பகுதியாகும். போளூரில் இருந்து ஜமுனாமரத்தூர் வழியாக ஆட்டியானூர் பெரிய கிராமம் வரை டவுன் பஸ் இயக்கினால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், நோயாளிகள் போளூர் சென்று வர வசதியாக இருக்கும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டவுன் பஸ் இயக்குவார்களா? -ம.ம.பழனி, ஆட்டியானூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#42058

கால்வாயில் சிமெண்டு சிலாப் அமைக்கப்படுமா?

கால்வாயில் சிமெண்டு சிலாப் அமைக்கப்படுமா?கழிவுநீர்

வேலூர் மாநகராட்சி கழிஞ்சூர் 13-வது வார்டு காந்தி தெரு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் மழைப் பெய்யும்போது அங்கு தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதன் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் அமைக்க வேண்டும். மேலும் சாலையோரம் குடிநீர் திருப்பும் வால்வு உள்ளது. அந்த வால்வு தொட்டி மூடப்படாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜி.பெருமாள். கழிஞ்சூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42056

உடைந்து நிற்கும் மின்கம்பம்

உடைந்து நிற்கும் மின்கம்பம்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி மந்தை வெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் ஒன்றின் அடிபாகம் உடைந்து சேதம் அடைந்துள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -துரைராஜ், மந்தைெவளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick