Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Dec 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42860

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

திருப்பத்தூர் அசோக் நகர் நூலகம் பின்பக்கம் ஏராளமான குப்பைகளை பொதுமக்கள் கொட்டி வருகின்றனர். அந்த இடத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்தும், அதை மீறி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். அதன் அருகிலேயே பள்ளி, மருத்துவமனை, நூலகம் ஆகியவை அமைந்துள்ளன. இதனால் அங்கு வரும் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவதாஸ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42859

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

திருப்பத்தூரில் இருந்து ஜலகம்பாறை செல்லும் வழியில் உள்ள பெரிய ஏரியின் கரையில் மின்வாரிய அலுவலகத்தின் அருகில் ஏராளமான குப்பைகள், கோழி கழிவுகளை கொட்டி வருகின்றனர். அதன் அருகிலேயே தொடக்கப்பள்ளி உள்ளது. இதனால் பள்ளியைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலசுந்தரம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#42858

குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லைமற்றவை

செங்கம் அருகில் உள்ள சொப்பனந்தல் கிராமத்தில் குரங்குகள் தொல்லை உள்ளது. வீட்டுத் தோட்டத்தில் உள்ள காய்கறிகள், மொட்டைமாடியில் உலர்த்தப்படும் தானியங்கள் ஆகியவற்றை குரங்குகள் தின்று சேதப்படுத்துகின்றன. குடிநீர் குழாய்கள், வயர், கேபிள் ஆகியவற்றை சேதப்படுத்துகின்றன. குரங்குகளை பிடித்து காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#42857

நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

போக்குவரத்து

வேலூரில் இருந்து ஆரணி, சேத்துப்பட்டு, தேசூர் வழியாக மகமாய் திருமணி வரை தடம் எண்:225 வி இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் பஸ்சை நிறுத்தி விட்டார்கள். அந்தப் பஸ்சை மீண்டும் இயக்கினால் வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜா, தேசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#42849

போலீஸ் நிலையங்களில் போன் நம்பர் எழுதி வைக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் புகார்கள் அளிக்க வருகின்றனர். எனவே, அவசர உதவிக்கு போன் நம்பரை எழுதி வைக்க வேண்டும். -டி.சியாமளா, கருங்காலிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 4:54 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#42848

சாலையோர செடி, கொடிகளை அகற்றுவார்களா?

சாலை

கீழ்பென்னாத்தூரில் கோட்டான் ஏரியையொட்டி செல்லும் சாலையில் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அவற்றை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -என்.பரிமேலழகன், கல்பூண்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#42847

பழைய பஸ் நிலைய கட்டிடம் சீரமைக்கப்படுமா?

பழைய பஸ் நிலைய கட்டிடம் சீரமைக்கப்படுமா?மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் எதிரே பழைய பஸ் நிலைய கட்டிடம் பயன்பாடு இல்லாமல், பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே பழைய பஸ் நிலைய கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா? -சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:40 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42676

சாலையோரம் குவியும் குப்பைகள்

சாலையோரம் குவியும் குப்பைகள்குப்பை

வேலூர் கொணவட்டத்தை அடுத்த சதுப்பேரி ஏரி அருகே சர்வீஸ் சாலை ஓரம் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், கொணவட்டம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#42675

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

அணைக்கட்டு தாலுகா மகமதுபுரம் ஊராட்சி பாட்டை வீதி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்தச் சாலையை சீரமைக்கும்படி ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இந்தச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயகுமார்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#42671

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா சித்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலனியில் பெருமாள் கோவில் அருகில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தார் சாலையாக மாற்ற வேண்டும். -சுந்தரமூர்த்தி, சித்தாம்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#42670

நார்வா சந்துகளை தூய்மைப்படுத்த வேண்டும்

குப்பை

வாலாஜாவில் உள்ள நார்வா சந்துகள் மோசமான நிலையில் உள்ளன. நெடுஞ்சாலையையொட்டி இருக்கும் திருமலை முதல் தெரு பின்பக்கமுள்ள நார்வா சந்து, கச்சாலன் தெரு, புஜனராவ் தெரு உள்பட பல சந்துகள் அசுத்தமாக உள்ளன. அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி, இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு நார்வா சந்துகளை தூய்மைப்படுத்தி கொசு மருந்து, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். -கபிலன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#42669

திறக்கப்படாத பள்ளி கட்டிடம்

மற்றவை

வாலாஜா அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பாகவெளி கிராம எல்லையில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் ரூ.77 லட்சத்து 11 ஆயிரத்தில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமலேேய பாழடைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரிகளும் பள்ளி கட்டிடத்தை திறக்க நடவடிக்ைக எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை திறக்குமா? -குமார், பாகவெளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick