Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 May 2025 7:56 PM GMT
K. RAJANAYAGAM
#55915

பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே குறும்பேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் உடைந்து, சேதமடைந்துள்ளது. இதை, சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சஞ்சீவி, விஷமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:53 PM GMT
K. RAJANAYAGAM
#55914

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

மற்றவை

போளூர் தாலுகா களம்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். பிரசவம் மற்றும் பல்வேறு காரணத்துக்காக பலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, நோயாளிகளுக்குப் போதிய குடிநீர் வசதி இல்லை. கழிவறையில் தண்ணீர் இல்லை. நோயாளிகள் மின்சாரம் இன்றி அவதிப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுகாதாரத்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் போதிய வசதிகளை செய்து கொடுக்குமா? -இளஞ்சேரன், களம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:51 PM GMT
K. RAJANAYAGAM
#55913

குவித்து வைத்துள்ள குப்பைகள்

குவித்து வைத்துள்ள குப்பைகள்குப்பை

ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் குடியிருப்பு பகுதி மையத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அவற்றை அகற்றாமல் வைத்துள்ளனர். அந்தக் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண்குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:49 PM GMT
K. RAJANAYAGAM
#55912

இடையூறாக இருக்கும் தடுப்புச்சுவர்

இடையூறாக இருக்கும் தடுப்புச்சுவர்சாலை

கண்ணமங்கலத்தில் திருவண்ணாமலை செல்லும் சாலையில் புதிய பஸ் நிலையம் எதிரே பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் சாலையின் நடுவே சிமெண்டு தடுப்புச் சுவர் உள்ளது. இந்தத் தடுப்புச்சுவர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. அந்தத் தடுப்புச் சுவரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேந்திரன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:47 PM GMT
K. RAJANAYAGAM
#55911

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேவை

மற்றவை

ஜவ்வாதுமலைப்பகுதியில் ஆட்டியானூர் கிராமம் உள்ளது. அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். மக்கள் மருத்துவமனைக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜமுனாமரத்தூருக்கு தான் செல்ல வேண்டும். ஆகையால் ஆட்டியானூரில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜி.சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:45 PM GMT
K. RAJANAYAGAM
#55910

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

தேசூர் அருகே மகமாய்திருமணி கூட்ரோட்டில் பயணிகள் வெளியூர் செல்ல பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அங்கு பல ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? -பவானி, தேசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:43 PM GMT
K. RAJANAYAGAM
#55909

பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

சேத்துப்பட்டில் இருந்து மடம், தேசூர், மகமாய்திருமணி வழியாக வெடால் வரை அரசு டவுன் பஸ் இயக்கினால் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பயன் அடைவார்கள். அதேபோல் ஆலங்காயத்தில் இருந்து அத்திப்பட்டு வழியாக ஆட்டியானூர் வரையும், ஜமுனாமரத்தூரில் இருந்து அத்திப்பட்டு, ஆட்டியானூர் வரையும், ஆரணியில் இருந்து போளூர், ஜமுனாமரத்தூர் வழியாக ஆட்டியானூர் வரையும் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ம.ம.பழனி, ஆட்டியானூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM
#55908

நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?சாலை

கே.வி.குப்பத்தை அடுத்த கோவிந்தாபுரம், சேத்துவண்டை ஊராட்சிகள் சந்திக்கும் பகுதியில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலை பிரியும் பகுதியில் புதிய சாலைக்கும், பழைய சாலைக்கும் இடைப்பட்ட குறுகிய தூரம் ஜல்லிக் குவியல்களை கொண்டு பரப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை ஜல்லிகள் பதம் பார்க்கின்றன. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:38 PM GMT
K. RAJANAYAGAM
#55907

காந்திநகருக்குள் பஸ்கள் வந்து செல்லுமா?

போக்குவரத்து

காட்பாடி-பாகாயம் இடையே செல்லும் டவுன் பஸ்களான 1, 2 ஆகியவை ஓடைப்பிள்ளையார் கோவில் எதிரில் உள்ளே காந்திநகருக்குள் வந்து செல்வது வழக்கம். ஆனால், ஒரு சில தனியார் பஸ்கள் சமீப காலமாக காந்திநகருக்குள் வருவது இல்லை. நேராகச் சென்று விடுகின்றன. இதனால், பஸ் பயணிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்க எடுப்பார்களா? -ராஜவேங்கை, காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:35 PM GMT
K. RAJANAYAGAM
#55906

வீடுகளில் புகும் கழிவுநீர்

வீடுகளில் புகும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் ஓல்டு டவுன் அருகே குட்டைமேடு பகுதியில் தோல் கிடங்கு தெருவில் கழிவுநீர் வடியாமல் ஆண்டு கணக்கில் தேங்கி நிற்கிறது. சில வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள சுகாதாரச் சீர்கேட்டை போக்க, கழிவுநீரை வடிய வைக்க கால்வாயைத் தூர்வார வேண்டும். -ஆர்.வி. வேலன், குட்டைமேடு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:24 PM GMT
K. RAJANAYAGAM
#55905

உடைந்த கால்வாய் சிமெண்டு சிலாப்

உடைந்த கால்வாய் சிமெண்டு சிலாப்கழிவுநீர்

வேலூர் சங்கரன்பாளையம் வ.உ.சி. நகர் துணை அஞ்சல் அலுவலகம் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் இருக்கிறது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவராமன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:49 PM GMT
K. RAJANAYAGAM
#55748

விபத்தை தடுக்க நடவடிக்கை

மற்றவை

அரக்கோணம்-திருத்தணி, காஞ்சீபுரம்-சோளிங்கர் ஆகிய பிரதான சாலைகளில் சென்டர் மீடியன் முற்றிலும் தெரியாத வகையில் அழிந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் சென்டர் மீடியன் மற்றும் பிரதிபலிப்பான்களை புதுப்பித்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - சீனிவாசன். அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 56
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick