Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 May 2024 6:36 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46720

பயனற்ற குப்பைத்தொட்டிகள்

குப்பை

திருப்பத்தூரை அடுத்த கொரட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைத்தொட்டிகளை ஒரே இடத்தில் வைத்துள்ளனர். அந்தக் குப்பைத்தொட்டிகளை ஒவ்வொரு கிராமங்களில் வைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே குப்பைத்தொட்டிகளை வெவ்வேறு இடங்களில் வைத்து குப்பைகளை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ்குமார், கொரட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46719

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையோரம் குப்பைகள், கோழிக்கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:25 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46718

சுடுகாட்டில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பார்களா?

குப்பை

வாலாஜாவில் உள்ள கரிக்கல் சுடுகாட்டில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. சுடுகாட்டில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரங்கநாதன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:21 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#46717

பகலிலும் எரியும் மின் விளக்கு

பகலிலும் எரியும் மின் விளக்குமின்சாரம்

சோளிங்கரில் லிங்காரெட்டி தெருவில் இருந்து குட்டை தெருவுக்கு செல்லும் வழியில் ஒரு மின்கம்பத்தில் தெரு விளக்கு பகலிலும் எரிந்து கொண்டு இருக்கிறது. பகலில் தெரு விளக்குகள் எரிவதை தவிர்க்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:20 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46712

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை ஓரம் பலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை எரிப்பதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -சண்முகம், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:16 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46700

ஓ.ஆர்.எஸ். கரைசல் வைக்கப்படுமா?

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஓ.ஆர்.எஸ் கரைசல் வைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். முத்துக்கடை பஸ் நிலையம், நவல்பூர் பஸ் நிறுத்தம் மற்றும் ராணிப்பேட்டை டவுன் பஸ்கள் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வைக்கப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரகாஷ், முத்துக்கடை.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:15 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#46699

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

சோளிங்கர் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது. அந்த அறை முன்பு குடிநீர் குழாய் உள்ளது. அதில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பாசி படித்து, சுகாதார சீர்கேடாக உள்ளது. இதனால் பாலூட்டும் அறைக்கு செல்ல முடியாமல் தாய்மார்கள் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் பாசிகளை அகற்றி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். -கண்ணன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46698

செத்த மீன்களை அகற்ற வேண்டும்

செத்த மீன்களை அகற்ற வேண்டும்மற்றவை

வேலூர் கோட்டை அகழியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செத்து மிதந்த மீன்கள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் மீன்கள் செத்து, பூங்கா கரை ஓரத்தில் ஒதுங்கி உள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. செத்த மீன்களை முழுமையாக அகற்ற கோட்டை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தர்மலிங்கம், கஸ்பா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:06 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#46697

பள்ளத்தால் ஆபத்து

பள்ளத்தால் ஆபத்துமற்றவை

பேரணாம்பட்டு சாலபேட்டை சவுக்கு ரோட்டில் அம்பேத்கர் சிலை அருகில் குடிநீர் திறப்பதற்கான பள்ளத்தை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அந்த வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகள் பள்ளத்தில் விழுந்து செல்கிறார்கள். ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளத்துக்கு மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:04 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#46696

மலைபோல் குவிந்த குப்பைகள்

மலைபோல் குவிந்த குப்பைகள்குப்பை

வேலூர் மாவட்டம் சென்னங்குப்பம் கிராம நிர்வாக அலுவலகம் பின்பிக்கம் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. குப்பைகளை எரிப்பதால் அப்பகுதியில் இருப்பவர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீ.நேதாஜி, சென்னங்குப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46695

சிமெண்டு சிலாப் சரி செய்யப்படுமா?

சிமெண்டு சிலாப் சரி செய்யப்படுமா?மற்றவை

வேலூர் சங்கரன்பாளையம் காமராஜர் தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேல் பகுதியில் சிமெண்டு சிலாப் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவில் நடந்து செல்லும் பொதுமக்கள் திடீரெனப் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை உருவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் சிமெண்டு சிலாப் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரிமுத்து, வேலூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 5:36 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#46686

ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்

சாலை

போளூர் பேரூராட்சியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுப்பட்டு வருகிறது. அந்த மேம்பாலப் பணி இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இதனால் திருவண்ணாமலை செல்வோர், உள்ளூர் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேம்பாலப் பணி முடிந்தால் போளூரில் போக்குவரத்து சீராகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், போளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick