அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

Update: 2022-08-02 12:13 GMT


வேலூர் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே ஆற்காடு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகிக்கும் போதெல்லாம் அவ்வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி சாலை ஓரங்களில் தேங்கி காணப்படுகிறது. மேலும் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொதுமக்கள் கற்களை வைத்துள்ளனர். இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்