ஆரணியை அடுத்த தச்சூர் பகுதியில் ஓடும் கமண்டல நாகநதியில் மணல் கொள்ளை நடக்கிறது. அதை போலீசார் கண்டு கொள்வது இல்லை. ஆற்றில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. தற்போது கோடைக்காலம் வந்து விட்டது. எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் கமண்டல நாகநதியில் மணல் எடுப்பதை வருவாய்த்துறையினரும், போலீசாரும் தடுக்க வேண்டும்.
-சேவாக், தச்சூர்.