புதிய குடிநீர் தொட்டி வேண்டும்

Update: 2026-09-06 13:18 GMT

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஊராட்சியில் அமைந்துள்ள கோடம்பட்டியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டியானது தற்போது சேதமடைந்து உள்ளது. தொட்டியின் சுற்றுச்சுவர் மற்றும் தூண்களில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் சூழ்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. எனவே பெரும் அசம்பாவிதம் நிகழும் முன், இந்த சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதியதாக அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்