சிறுபாக்கம் அடுத்த தொழுதூர் மற்றும் மங்களூர் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது 2 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான முறையில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.