பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2026-05-24 16:40 GMT

பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளியில 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 5 ரூபாய் நாணயம் செலுத்தி 20 லிட்டர் குடிநீர் பிடித்து வந்தனர். இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்து விட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் ரூ.30 முதல் 40 ரூபாய் வரை கொடுத்து குடிநீர் கேன்கள் வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்