கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஒப்பதவாடி ஊராட்சி அங்கிநாயனப்பள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்ததால் இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து சீராக குடிநீர் வழங்க வேண்டும்.