தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

Update: 2026-05-24 16:16 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாக்கம் புதூரில் இருந்து கானாங்காடு செல்லும் சாலையில் மினி குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டி சேதமடைந்து பல மாதங்களாக காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிதண்ணீர் இன்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கோடைக்காலம் வேறு தொடங்கி இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்