குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்படுமா?

Update: 2026-05-24 14:19 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு எதிரே உள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் அமைக்க குழிதோண்டப்பட்டது. அங்கு குழாய்கள் பதிக்கப்பட்டு குழியை ஊழியர்கள் மூடவில்லை. இதனால் அந்தப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு உயிர் பலி ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட குழியை மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்