பொதுமக்கள் அவதி

Update: 2026-05-24 10:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் புள்ளான்விடுதி ஊராட்சி வார்டு எண் 9-க்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலரால் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுவதால், போதிய குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்