செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2026-05-24 10:45 GMT

கரூர் மாவட்டம் குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியில் தொடங்கி வேட்டமங்கலம், குளத்துப்பாளையம் வழியாக சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரிநீர் கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில், குளத்துப்பாளையத்தில் இருந்து புங்கோடை வரையுள்ள உபரிநீர் கால்வாயில் முளைத்திருந்த செடி, கொடிகள் அகற்றப்படவில்லை. இதனால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உபரிநீர் கால்வாயில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்