பூட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்

Update: 2026-05-03 13:36 GMT

ஏரியூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் சுத்திகரிக்கப்பட்ட கட்டண குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் நிலையம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் மக்கள் குடிநீருக்கு திண்டாடி வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்