திருவள்ளூர் மாவட்டம், நத்தமேடு பகுதியில் ஆயிரக்காணக்கான மக்கள் வசித்த வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் மாசு கலந்து மஞ்கள் நிறமாக வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.