பழுதாகும் சாலை

Update: 2025-11-02 10:35 GMT

கோத்தகிரி அருகே கேர்பெட்டா புதூரில் உள்ள பாலம் பகுதியில் வாகனங்களை நிறுத்தி தண்ணீரால் கழுவுகின்றனர். இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வருகிறது. மேலும் சாலையும் பழுதாகி வருகிறது. இதனால் பல இடங்களில் சாலை மேடு, பள்ளமாக காட்சி அளிக்கிறது. அங்கு தண்ணீர் வழிந்து ஓட வடிகால் வசதி கூட சரிவர கிடையாது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு வாகனங்களை நிறுத்தி கழுவுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்