பள்ளியில் தேங்கும் மழைநீர்

Update: 2025-10-26 11:53 GMT

கோவை மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். மழை பெய்தால் அந்த பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் மழைநீர் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே பள்ளியில் மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்