குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்!

Update: 2025-10-19 11:23 GMT

சென்னை திரு.வி.க. நகர் 76 மற்றும் 77-வது வட்டத்திற்குட்பட்ட அங்காளம்மன் கோவில் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, முனுசாமி தெரு பகுதிளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கர துர்நாற்றம், மேலும் கழிவு நீர் வெளியேற சரியான பாதை இல்லாததால் குடியிருப்புகளுக்குள் புகும் அவலம் நிகழ்கிறது. எனவே, கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறைஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்