சென்னை மாநகராட்சி, 12-வது மண்டலம் கே.கே நகர், 4-வது தெருவில் பழமைவாய்ந்த கிணறு உள்ளது. நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்து வந்தது. ஆனால் தற்போது இதனை மர்மநபர்கள் சிலர் துர்நாற்றமுடைய சாக்கடை மண்ணால் மூட முயற்சிக்கிறார்கள். பலருக்கு தண்ணீர் கொடுத்த இந்த கிணற்றினை பாதுகாக்க சம்பந்தபட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து கிணற்றினை பாதுகாக்கவும் அதை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திரும்ப கொண்டு வரவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.