திருவட்டார் பஸ்நிலையம் முன் உள்ள சாலையோரத்தில் குடிநீர் வினியோகத்திற்காக ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையோரத்தில் பாய்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.