பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி ஊராட்சி ஜி.கல்லுப்பட்டியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.