ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

Update: 2025-09-14 11:59 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் தொண்டமான் ஏரி உள்ளது. இப்பகுதியில் உள்ள மிக முக்கியமான நீர்நிலைகளில் ஒன்றான தொண்டமான் ஏரியின் மூலம் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் தொண்டமான் ஏரி பாசன வாய்க்கால் மற்றும் தண்ணீர் செல்லும் வழிகளில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்