திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள சோபனபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்த நிலையில் இன்னும் சரிசெய்யப்படாததால், மாணவ - மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கழிவறைக்கு செல்லும் போது தண்ணீரின்றி தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள மின் மோட்டாரை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.