வீணாகும் குடிநீர்

Update: 2025-09-07 11:50 GMT

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள நடுகளம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு கோட்டப்பாளையம் ஊராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாய்களில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், நெல் கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி குடிநீர் வீணாவதுடன், பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் மாசு கலக்கிறது. இதனால் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்