திருவெண்ணெய்நல்லூர் அருகே அண்டராயநல்லூர் அண்ணா நகர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும் உடைந்த குழாய் வழியாக கழிவுநீர் கலப்பதால் அதனை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க உடைந்த குழாயை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.