திருச்சி மாவட்டம் செந்தண்ணீர்புரம் மணல்வாரித்துறை இடுகாட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வேலை செய்யாமல் பழுதடைந்துள்ளது. இதனால் இங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வருபவர்கள் இறுதிச்சடங்கு செய்து முடித்தபின் தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் இங்குள்ள கழிவறை சுகாதாரமற்ற முறையில் உள்ளது. எனவே மின்மோட்டாரை சரிசெய்து, கழிவறையை சுகாதாரமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.