வடுகன்பற்று கூண்டு பாலத்தில் இருந்து பொற்றையடி செல்லும் நான்குவழிச்சாலை பகுதியில் தேவகுளம் உள்ளது. நான்குவழிச்சாலை பணியின் காரணமாக இந்த குளத்தின் மடையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மடையின் வழியாக பாயும் தண்ணீர் மூலம் சுமார் 30 ஏக்கர் பரப்பில் நெல்சாகுபடி நடைபெற்று வந்தது. தற்போது மடையில் சீரமைப்பு பணியால் தண்ணீர் நிறுத்தப்படுள்ளது. இதனால், நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தின் மடையின் சீரமைப்பு பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-ராமதாஸ், சந்தையடி.