புவனகிரி அடுத்த அகரஆலம்பாடி ஊராட்சியை சோ்ந்த முகந்தெரியாங்குப்பம் கிராம மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.