குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2025-08-03 12:56 GMT

அரியலூர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது அகட்டான்குளம். இந்த அகட்டான்குளம் தற்போது செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களது வீட்டு தேவைகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளின் தாகத்தை போக்கவும் இந்த குளத்தின் நீரை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது குப்பைகள் தேங்கி செடி, கொடிகள் மண்டி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வார வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்