திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி சித்திரப்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அல்லா கோவில் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஒரு வருடமாக தண்ணீர் ஏற்றாமல் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. தற்போது காவிரி கூட்டு குடிநீர் வசதியின் கீழ் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் அதுவும் சரிவர வழங்கப்படாததால் இப்பகுதி மக்கள், முதியவர்கள் போதுமான தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.