அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீ புரந்தான் கிராமம் காலனி தெருவில் உள்ள இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்உள்ளன.இந்த தொட்டியில் நிரப்பி வைக்கப்படும் தண்ணீரை அங்குள்ள ஒரு சிலர் இரவு நேரங்களில் தண்ணீரை திறந்து விட்டு விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தினந்தோறும் கிடைக்காமல் சிரமம் அடைகின்றனர். எனவே தொட்டியை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும். மேலும் கதவு அமைத்து பூட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.