திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஒக்கரை ஊராட்சி ரெட்டியார் தெருவில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சாலை ஓரத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டியின் மின் மோட்டார் பழுதடைந்து, கடந்த 9 மாதங்களாக பயனற்று காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள மின் மோட்டாரை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.