சீனாபுரம் ஊராட்சி ஆயிக்கவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழ வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.