திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நகராட்சி மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குடிநீர் கலங்கலாக வருவதினால் இப்பகுதி மக்கள் அந்த தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.