பவானி அருகே தொட்டிபாளையம் புதுக்கடையாம்பட்டி பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.