வீணாகும் குடிநீர்

Update: 2025-04-20 12:16 GMT

கிணத்துக்கடவு அருகே திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டு உள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. அந்த குடிநீர் அங்கேயே தேங்கி சாக்கடை போல காட்சி அளிக்கிறது. கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், இப்படி குடிநீர் வீணாவது காண்போரை கவலை அடைய செய்கிறது. எனவே அங்கு ஏற்பட்டு உள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்