திண்டுக்கல்லை அடுத்த மாரம்பாடியில் இருந்து கஸ்தூரிநகர் வரை வசிக்கும் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எப்போதாவது குழாயில் வினியோகிக்கப்படும் தண்ணீரும் சிறிது நேரமே வழங்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.