குஜிலியம்பாறை ஒன்றியம் பூசாரிப்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் சேதமடைந்துள்ளது. மேலும் தூணில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை விரைந்து சீரமைக்க வேண்டும்.