வீணாகும் குடிநீர்

Update: 2025-04-06 11:47 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகிலுள்ள கோடாலிகருப்பூர், வாழைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், அரங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய நகரங்களுக்கு மற்றும் அதனையொட்டிய கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் ஓட்டை ஏற்பட்டு குடிநீர் யாருக்கும் பயனில்லாமல் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்