நெய்வேலி அருகே ஆர்ச்கேட் மற்றும் இந்திரா நகரில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த குடிநீர் பொதுமக்களுக்கு போதுமான அளவுக்கு இல்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?