குடிநீர் தொட்டியை சரி செய்ய கோரிக்கை

Update: 2025-02-16 12:20 GMT
கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் உள்ள சமுதாய கூடம் அருகேகே குடிநீர் தொட்டி உள்ளது. இத்தொட்டியில் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த சில மாதங்களாக குடிநீர் தொட்டியில் இணைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்