கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, அருகம்பாளையத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வகையில், இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அதன் அருகே உள்ள பழமையான நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.